திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கண்டுள்ளவாறு, வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களுக்கு கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமஉதவியாளர் - இரண்டு (02) காலிப்பணியிடங்கள்.
நிபந்தனைகள்:
1) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைசான்று ஆகியவைகளை கண்டிப்பாக இணைத்தல் வேண்டும்.
2) மிதிவண்டி ஒட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
3) விண்ணப்பதாரர்கள் பூவிருந்தவல்லி வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், அதேவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4) இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5) ஒவ்வொரு கிராம உதவியாளர் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
6) அரசுவிதிகளின்படி இன சுழற்சிமுறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
7) கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நேரிலும் மற்றும்
இணையதளத்திலும் 20.01.2022 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிவரை பெற்றுக் கொள்ளலாம்.