தமிழக அரசின் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி
பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளா்ப்பு இலவசப் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அம் மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவுச் சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், கறவை மாடு வளா்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் டிச. 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கறவை மாடு இனங்கள், அவற்றின் இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறை மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853 07022 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரைப் பதிவுசெய்து பயன்பெறலாம்.